2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

‘சசிகலா வந்தவுடன் இருக்கா, இல்லையா என்பது தெரியும்’

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சசிகலா வெளியே வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமா, இல்லையா என்பது தெரிந்து விடும் என, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் மக்கள் சபை கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முதலமைச்சர் பழனிசாமி, விவசாய பிரச்னைகளுக்காகவும், ‘நீட்’ பிரச்சினைக்காகவும் பிரதமரை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி, சசிகலா வெளியே வருகிறார் என்றும் அவர் வந்தவுடன்  பழனிசாமிக்கு ஆபத்து என்றும் அந்த ஆபத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமரை சந்தித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

சசிகலா வெளியே வந்த உடனே இந்த ஆட்சி இருக்கா, இல்லையா என்பது தெரிந்து விடும் என்றும் இந்த நிலையில் தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது என்றும் கூறிய  அவர், அதனால், தி.மு.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .