2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்

Editorial   / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி   மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரையான் வதேராவுக்கு அவரது நீண்ட கால தோழி அவிவா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிச்சயதார்த்த விழா மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ரையான் வதேராவும் அவிவாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டனர். அவிவா ஒரு தொழில்முறை மாடல் மற்றும் கலை சார்ந்த துறையில் ஆர்வம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.

தனது குடும்பத்தின் அரசியல் பாரம்பரியத்திற்கு வெளியே தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வருகிறார் ரைஹான். சிறு வயதிலிருந்தே கலை மற்றும் புகைப்படம் எடுத்தல் மீது மிகுந்த நாட்டம் கொண்டவராக அறியப்படுகிறார் ரைஹான்.

பொதுவில் அரிதாகவே தோன்றினாலும், சில அரசியல் நிகழ்வுகளில் காணப்பட்டுள்ளார். தொழில் ரீதியாக, ரைஹான் ஒரு நிறுவல் மற்றும் காட்சி கலைஞர், பயணம் மற்றும் இயற்கை புகைப்படம் எடுப்பதில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்,

அதை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் உள்ளார். கொல்கத்தாவில் 'டார்க் பெர்செப்சன்' மற்றும் 'தி இந்தியா ஸ்டோரி' போன்ற தனி கண்காட்சிகளை அவர் நடத்தியுள்ளார்.

டெல்லி, டேராடூன் மற்றும் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் ரைஹான் கல்வி பயின்றார்.

அவருக்கு மிராயா வத்ரா என்ற சகோதரியும் உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X