2021 மார்ச் 03, புதன்கிழமை

ஜனவரி 29ஆம் திகதி பட்ஜெட் கூட்டத்தொடர்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் திகதி தொடங்குகிறது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக மக்களவை செயலகமும் மாநிலங்கள வை செயலகமும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.கொரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை விதிமுறைகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. 

இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மார்ச் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .