2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்ரா:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசியில்  பேசிய மர்ம மனிதன் தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறினான். இதைத் தொடர்ந்து ஆக்ரா பொலிஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்றனர்.

தாஜ்மஹாலுக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹால் தற்காலிமாக மூடப்பட்டது. தாஜ்மஹாலை சுற்றிலும் வெடிகுண்டு இருக்கிறதா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அங்கு தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும் தெரிய வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .