Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே
மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன்
தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து
தெரிவித்தது தொடர்பாக 25 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறும் போது:-
‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதுக்கு சமூக விரோதிகளே காரணம் என பேசியிருந்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்ட நிலையில் ரஜினிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
33 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago