2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் உடல் தகனம்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் இன்று(16) தகனம் செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன்,  சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுக்( 15) காலமானார்.

அவரது மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ஞானதேசிகன் உடல்இன்று தகனம் செய்யப்படவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுஷ்ரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .