2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பிக்பாஸில் வெற்றி வாகை சூடினார் ஆரி அர்ஜூனன்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 100 நாள்களுக்கும் மேலாக  தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் கேளிக்கை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியாக அறியப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 16 திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். கடந்த 100 நாள்களாக இந்தப் போட்டியில் பங்கேற்று வந்த ஆரி அர்ஜூனன், பாலாஜி முருகதாஸ், ரியோராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சுந்தர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். தொடர்ச்சியாக 6 மணி நேரம் வெளியான இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதன் அடிப்படையில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .