2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பிரதமருடன் பழனிசாமி நாளை மறுநாள் சந்திப்பு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

நாளை மறுநாள்  19ஆம் திகதி  பிரதமரை அவர் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக்கொள்ள இருக்கிறார்.

மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் படியும் அழைப்பு விடுக்கவுள்ளார்.  சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டம் உட்பட  5 திட்டங்களை தொடங்கி வைக்கும் படி   பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.

இத்துடன் அரசியல் தொடர்பாகவும் அவர் பிரதமருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமருடனான சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .