2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பொங்கலையொட்டி 2.5 கோடி உண்டியலில் காணிக்கை

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இம்முறை ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒன்லைன் மூலம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்ற னர். அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .