2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மன்னிக்க, மறக்க நினைத்தாலும் முடியவில்லை!

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அறிவித்ததைத் தொடர்ந்து சிலர் கூறிய வார்த்தைகளை மன்னிக்க, மறக்க நினைத்தாலும் முடியவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கமாகக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாகக் கூறியிருந்தார். அதற்குள் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் இருந்தபோது படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் மருத்துவமனையில் சேர்ந்து தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கை மூலமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறி வருகின்றனர்.

அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு போராட்டம் நடந்தது. இதில் ரனினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .