2020 மே 28, வியாழக்கிழமை

விபத்துகளில் 5 பணியாளர்கள் பலி

Editorial   / 2020 மே 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நேற்று  நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வெவ்வேறான இரண்டு விபத்துகளில் மூன்று பெண்கள் உள்ளடங்கலாக ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு ஜான்சி-மிர்ஸாபூர் நெடுஞ்சாலையில் டயரொன்று வெடித்ததையடுத்து ட்ரக் புரண்டதில் மூன்று பெண் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 12 பேர் காயமடைந்திருந்தனர்.

உனானோவில் ட்ரக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X