2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (05.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (05.04.2014)

மேடம்
தேவையில்லாத மருத்துவ செலவுகள் உண்டாகும். எனவே கவனம் அவசியம். பெண்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். 
அஸ்வினி : குழப்பம்
பரணி : துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி


மிதுனம்
உடலில் காயங்கள் உண்டாகும் அபாயங்கள் காணப்படுகின்றன. பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும். பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : இன்பம்
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
வெளிநாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும்.  நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகம் : இன்பம்
பூரம் : அமைதி
உத்திரம் 1ஆம் பாதம் : மகிழ்ச்சி


கன்னி
நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். பணவரவுகள் நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.  
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்


துலாம்
செலவுகள் கூடுதலாக இருக்கும் சிக்கனம் தேவை. அலைச்சலினால் உடலில் சிறிது அசௌகர்யம் காணப்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிக்கல்கள்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3 : பயம்


விருட்சிகம்
சிறிது பண தட்டுப்பாடுகள் காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து சுப செய்திகள் வந்து சேரும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி


தனுசு
உடலில் உஷ்ணம் ஏற்பட்டு சிறிது பாதிப்புக்கள் உண்டாகும். பிறரிடம் உதவியை நாடுதல், வீண் மனஸ்தாபங்கள் காணப்படும்.
மூலம்: ஏமாற்றம்
பூராடம் : பிரச்சினை
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்


மகரம்
விரும்பிய இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: துக்கம்


மீனம்
அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சுப செலவுகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
பூரட்டாதி 4: வெற்றி   
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .