2021 மார்ச் 06, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (18.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (18.10.2014)
 
மேடம்
இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் உறுதித்தன்மை இருக்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறு வராமல் கவனமுடன் பணி புரிவீர்கள். வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.
அஸ்வினி : உறுதி
பரணி : கவனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வளர்ச்சி
 
 
இடபம்
தடைகளை தகர்த்தெறிய தகுந்த பணி புரிவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் ஆதரவாக பணிபுரிவார்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி
 
 
மிதுனம் 
நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் ஓரளவு கிடைக்கும். விற்பனையில் மந்த கதி இருக்கும். வாகன பயணத்தில் மித வேகம் நன்று.
மிருகசீரிடம் 2, 3: உதவி
திருவாதிரை: மந்தம்
புனர்பூசம்: கவனம்
 
 
கடகம்
இனிய அணுகுமுறையால் சில நன்மைகள் பெறுவீர்கள். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும். பணியாளர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கப்பெறும்.
புனர்பூசம்: நன்மை
பூசம் : கட்டுப்பாடு
ஆயில்யம்: சலுகை
 
 
சிம்மம்
மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெகுநாட்களாக தேடிய பொருட்கள் கிடைக்கும்.  உறவினர்களிடையே உறவு பலப்படும்.
மகம்: இன்பம் 
பூரம் : அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி 
 
 
கன்னி
இன்று பணிகள் எளிதாக நிறைவேறும். கூடுதல் சொத்து சேர்க்கை உண்டாகும். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்வீர்கள். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : பயணம்
 
 
துலாம்
மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. ஆதாயத்துடன் பணவரவு உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : குழப்பம்
சுவாதி : கவனம்
விசாகம் 1, 2, 3 : வரவு
 
 
விருட்சிகம்
பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறரிடம் ஏற்படும் அனாவசியமான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரவை விட செலவு அதிகரிக்கும்.
விசாகம் 4: சிரமம்
அனுசம்: கவனம்
கேட்டை: செலவு
 
 
தனுசு
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. எதிரிகள் செய்த கெடுதல் முயற்ச்சி பலம் இழந்து போகும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மூலம்: யோசனை
பூராடம் : நலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
மகரம்
குறிப்பிட்ட செயல்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் நல்வழிகாட்டும். அதிக பயன் இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம்.
உத்திராடம் 2, 3, 4: தாமதம்
திருவோணம்: ஆலோசனை
அவிட்டம் 1, 2: கவனம்
 
 
கும்பம்
இனிய காரியங்களுக்கான அறிகுறிகள் தோன்றும். உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணவரவுகள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வரவு
 
 
மீனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உடல் நலனில் அதிக அக்கறை தேவைப்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி : அனுசரிப்பு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .