2021 மே 06, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (01.02.2015)

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (01.02.2015)

மேடம்
வண்டி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கென்று ஒரு தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வழியில் சற்று மனக்குழப்பங்கள் மிகுந்து காணப்படும். அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. 
அஸ்வினி : துன்பம் 
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு 


இடபம்
வீண் விவாதங்களையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. தொழில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் தங்களின் முயற்சியினால் வியாபாரம் பெருக காண்பீர்கள். குடும்பத்தில் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். 
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : பயம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம் 


மிதுனம் 
செலவுகளைக் குறைக்க நினைத்தாலும் செலவுகள் ஏதாவது ஒரு வழியில் தலை தூக்கும். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள். அதிக பொறுப்புக்களால் தொல்லை பட நேரிடலாம். 
மிருகசீரிடம் 2, 3: சிரமம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: பயம்


கடகம்
வரவேண்டிய கடன் தொகை கிடைக்கப்பெறுவீர்கள். செயல்களில் அதிக முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பணவரவுகள் திருப்தி தரும். 
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : சாதனை
ஆயில்யம் : இன்பம் 


சிம்மம்
எச்சரிக்கையாக செயல்பட்டால் ஏற்றம் பெறலாம். மூன்றாம் நபர் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன பயணத்தில் கவனம் தேவை. 
மகம்: துன்பம் 
பூரம்: கஷ்டம் 
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்கள்


கன்னி
கணக்கு வழக்குகளில் கவனம் தேவை.  ஆடம்பரமும் அநாவசிய கேளிக்கைகளும் பணத்தை விரையமாக்கும். வெளிநாடு பயணத்திற்காக அலைச்சல் பட வேண்டி இருக்கும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: கஷ்டம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


துலாம்
சோம்பல்கள் அதிக அளவில் காணப்படும். தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். குழந்தைகளிடத்தில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. 
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: குழப்பம் 


விருட்சிகம்
அரசியல் துறையினருக்கு ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சுப காரியதடைகள் படிப்படியாக விலகும். திட்டமிட்டு செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். 
விசாகம் 4: இன்பம்
அனுசம்: வெற்றி
கேட்டை: மகிழ்ச்சி 


தனுசு
வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் அவசியம். குழப்பங்களைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து போவது அவசியம். புதிய தொழில்களில் அதிக முதலீடுகள் கூடாது.
மூலம்: துன்பம்
பூராடம்: கஷ்டம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்


மகரம்
எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நலம் சீராகும். சொத்து விடயங்களில் இருந்த இழுபறி நிலைகள் மாறும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
ஆடம்பரங்களைத் தவிர்ப்பது அவசியம். வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும். விடுபட்ட குல தெய்வ வழிபாட்டை செய்வது நன்மை தரும். 
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம் : துக்கம்
பூரட்டாதி 1, 2, 3: அமைதி


மீனம்
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சிகளால் முன்னேற்றம் பெற வேண்டிய கால கட்டம் இது. 
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி: மகிழ்ச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .