2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (23.10.2013)

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (23.10.2013)
 
மேடம்
தொடர்ந்து வந்த மன அயர்ச்சி மற்றும் நம்பிக்கை அற்ற தன்மை மாறும். இல்லத்தில் புதிய கௌரவமான நிலை உண்டாகும். பிறருடைய யோசனைகள் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
உடல் நலனில் கவனம் கொள்ளல் வேண்டும். தொழில் மற்றும் பணியில் தேக்க நிலைகள் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் தாமதப்படக்கூடும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம்
 
 
மிதுனம்
உழைப்பும் பொறுப்பும் அதிகரித்த நிலையிலேயே இருந்து வரும். பணிபுரியும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். இருந்து வந்த வருமானங்கள் சிறிது குறையலாம்.
மிருகசீரிடம் 2, 3: பொறுப்பு
திருவாதிரை: நிதானம்
புனர்பூசம்: கஷ்டம்
 
 
கடகம்
போட்டிகள் தொடர்ந்து நீடிக்கும். விற்பனையும் லாபமும் சரியும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள் உண்டாகும்.
புனர்பூசம்: செலவுகள்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: துன்பம்
 
 
சிம்மம்
பொருளாதார நிலையில் கவனம் தேவை. பணியில் உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை அவசியம். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மகம்: பொறுமை
பூரம்: கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு
 
 
கன்னி
நிர்வாகத்தினருடைய ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் திடீர் வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார உக்திகள் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலம்
 
 
துலாம்
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: லாபம்
 
 
விருட்சிகம்
சில கசப்பான நினைவுகள் வந்து மனதை சங்கடப்படுத்தும். மறைமுகமாக எதிரிகள் தோன்றுவார்கள்.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நஷ்டம்
 
 
தனுசு
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடினமான சில வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்தவர்கள் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்கள்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
 
 
மகரம்
பெண்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டு. குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: மாற்றம்
அவிட்டம் 1, 2: இன்பம்
 
 
கும்பம்
கன்னிப்பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சில முக்கியமானவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கனிசமாக உயரும்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
உங்களுடைய படைப்புக்களுக்கு மற்றொருவர் உரிமை கொள்வார்கள். வீண் பழிகள் மற்றும் அவச்சொற்கள் உண்டாகும். புதிய சலுகைகளின் மூலம் லாபம் அதிகமாக கிடைக்கப்பெறுவீர்கள்.
பூரட்டாதி 4 : துன்பம்
உத்திரட்டாதி : துக்கம்
ரேவதி : லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--