2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (25.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (25.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 06ஆம் நாள் (22.11.2011) செவ்வாய்க்கிழமை. சித்த யோகமும் துவாதசி திதியும் ஹஸ்தம் நட்சத்திரம் காலை 08.56 மணிவரை பின்பு திரயோதசி.

ராகு காலம்: காலை 03.00 மணி முதல் 04.30 மணிவரை.

எமகண்டம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை. 

நல்ல நேரம்: காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 01.45 மணி முதல் 02.45 மணிவரை.மேடம்

அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், குடும்பத்தில் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும்.

அஸ்வினி: ஆதரவு

பரணி: புத்துணர்ச்சி

கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை

 

 

இடபம்

கடின வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும், தொழில் முயற்;சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.

கிருத்திகை 2, 3, 4: தோல்வி

ரோகிணி: சிரமம்

மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்

 

 

மிதுனம் 

வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், தனதான்ய விருத்தி, நல்ல செய்திகள் வந்து சேரும். 

மிருகசீரிடம் 2, 3: அதிஷ்டம்

திருவாதிரை: மகிழ்ச்சி

புனர்பூசம்: புதிய நுட்பம்

 

 

கடகம்

வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படுதல்.

புனர்பூசம்: பின்னடைவு

பூசம்: விருப்பமின்மை

ஆயில்யம்: கலைப்பு

 

 

சிம்மம்

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரலாம், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

மகம்: அந்நியோன்யம்

பூரம்: மனஅமைதி

உத்திரம் 1ஆம் பாதம்: வழிபாடுகள்

 

 

கன்னி

விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், இறை வழிபாடுகளில் அதிக அக்கரை செலுத்தவும்.

உத்திரம் 2, 3, 4: பகை

அஸ்தம்: ஆச்சரியம்

சித்திரை 1, 2ஆம் பாதம்: பிரார்த்தனை

 

 

துலாம்

குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் நவீன வேலைகளை மேம்படுத்தல், பொருள் சேர்க்கை.

சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதி

சுவாதி: வரவு

விசாகம் 1, 2, 3: உற்சாகம்

 

 

விருட்சிகம்

தேவையற்ற பிரச்சினைகளுக்கு முன்னிற்பதால் துன்பம், திருடர்களினால் மனபயம் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

விசாகம் 4: அவதானம்

அனுசம்: கலக்கம்

கேட்டை: சிக்கல்

 

 

தனுசு

தெய்வீக சிந்தனைகள் பிரார்த்தனைகள் உற்சாகம் தரும், அரசாங்க உதவிகள் கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல்.  

மூலம்: நட்பு

பூராடம்: சலுகை

உத்திராடம் 1ஆம் பாதம்: இறை நம்பிக்கை

 

 

மகரம்

பெண்களுடன் அனுசரித்து செயல்படுவது நன்மைக்கே, சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. 

உத்திராடம் 2, 3, 4: தேகசுகம்

திருவோணம்: மனகஷ்டம்

அவிட்டம் 1, 2: பொறுமை

 

 

கும்பம்

தொழில் ஸ்தானத்தில் இலாபம் அதிகரிக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.

அவிட்டம் 3, 4: நற்செய்தி

சதயம்: வெற்றி

பூரட்டாதி 1, 2, 3: செலவு

 

 

மீனம்

வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் காணப்படாது, மனக்கவலைகள் ஏற்படும், சில விதமான சிக்கல்கள் ஏற்படும்.

பூரட்டாதி 4: நட்டம்

உத்திரட்டாதி: சோர்வு

ரேவதி: துக்கம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .