2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (27.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (27.07.2013)
 
மேடம்
சுபகாரியங்கள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்பமான செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
 
 
இடபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும்.  உறவு பலப்படும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
 
 
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை நிலவும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம்.
மிருகசீரிடம் 2, 3: ஒற்றுமை
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: செலவுகள்
 
 
கடகம்
பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நன்மையான செயல்கள் நடைபெறும். நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : நன்மை
ஆயில்யம்: இன்பம்
 
 
சிம்மம்
அதிகாரிகளுடன் சுமூகமான உறவுகள் உண்டாகும். பேட்டிகளினால் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகம்: பேட்டி
பூரம்: சாதனை
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி
 
 
கன்னி
மனதளவில் துன்பங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விடயங்களில் மனதை செலுத்துவீர்கள்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
தலைவலி, காய்ச்சல் உண்டாகும். மனதில் பயம் தோன்றி மறையும். வெளியூர்களுக்கு பயணம் செல்லும் நிலை உண்டாகலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: பிரயாணம்
 
 
விருட்சிகம்
புதிய ஆடைகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிவகைகள் உண்டாகும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: இன்பம்
 
 
தனுசு
நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுகமான உணவு உண்ணும் நிலை உருவாகும். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.
மூலம்: இன்பம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
 
 
மகரம்
புதிய முயற்சிகள் செய்து வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொண்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: ஆர்வம்
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணாக பிரச்சினை ஏற்படும். வேண்டாத உணவால் பிரச்சினைகள், பெரியோர்களின் சந்திப்பு கிடைக்கப்பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சந்திப்பு
 
 
மீனம்
நல்லவர்கள் சேர்க்கை உண்டாகும். சகோதர, சகோதரிகளின் வருகை ஏற்படும். இதனால் மகிழ்ச்சி, நல்ல உறக்கம் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : தூக்கம்
ரேவதி : இன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X