2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலை அதிகரிப்பு: புதிய விலை

Editorial   / 2026 மே 02 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட புதிய விலைகளின் முழு விபரம்: பெற்றோல் 92 ஒக்டேன்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபா ஆகும். பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபா ஆகும். ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 392.00 ரூபா ஆகும். சூப்பர் டீசல் (4 ஸ்டார்): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபா ஆகும். மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபா ஆகும்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .