Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
ரிஷபம்: இன்று இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
மிதுனம்: இன்று உறவினர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
கடகம்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். செவ்வாய் குருபார்வை பெறுவதால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும்.
சிம்மம்: இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும்.
கன்னி: இன்று மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
துலாம்: இன்று உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பண புழக்கம் திருப்தி தரும்.
விருச்சிகம்: இன்று பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்.
மகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
கும்பம்: இன்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும்.
மீனம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
30 minute ago
48 minute ago