Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 30 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. கடமையுணர்வுடன், திறமையுடன் உண்மையாகச் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
ரிஷபம்: தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயன்றால் முடியாததில்லை. முன்னேற முயன்றால் வெற்றி உங்கள் பக்கம்.
மிதுனம்: மனையாளின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.. புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தைரியமும், புதிய உற்சாகமும் பிறக்கும்.
கன்னி: விரும்பியதற்கு மாறாக வேறு இடத்திற்கு மாற்றங்களை எதிர் பார்க்கலாம். பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டுக் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
மகரம்: வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. மனைவியின் கலகத்தால், உறவுகள்கள் பகையாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் உயர்வுக்கு உதவியாக இருக்கும்.
கடகம்: வீட்டில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்: தேவைக்கு அதிகமாகவே பணவரவு தாராளமாக இருக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் சீர்படும். உங்கள் தேஜஸ் கூடும்.
துலாம்: ஆசைப்பட்டவை அனைத்தும் ஓசையின்றி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். பெண்களால் நன்மை உண்டாகும்.
மீனம்: எதிர்பார்ப்புக்கு மேல் தனவரவு கூடும். கல்லூரிக் கனவுகள் நனவாகும். எதிரிகள் பணிவர். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
தனுசு: பயணங்களால் அனுகூலம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்பட்டு தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களால் வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்: புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்பட்டு சீரான வருமானத்திற்கு வழி பிறக்கும். சிலருக்கு வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்: பணவரவு பரவசம் தரும். அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
1 hours ago