2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (03.07.2014)

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (03.07.2014)
 
மேடம்
தொழிலில் சுமாரான போக்கே காணப்படும். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
அஸ்வினி : நலம்
பரணி : செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஓர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குறித்த நேரத்திற்கு பணிகளை முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும். 
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : பாராட்டு
மிருகசீரிடம் 1, 2: நட்பு
 
 
மிதுனம் 
வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: மகிழ்ச்சி
 
 
கடகம்
வியாபாரத்தில் சிலவிதமான சிக்கல்கள் உண்டாகும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். வேலை நெருக்கடியால் உடல் நலம் பாதிக்கப்படும்.
புனர்பூசம்: சிக்கல்
பூசம் : தாமதம்
ஆயில்யம்: துன்பம்
 
 
சிம்மம்
புதிய முயற்சிகள் லாபகரமாக அமையும். பொழுது போக்குகளில் ஈடுபடும் பொழுது  கவனம் தேவை. பணம் தேவைக்கேற்ப வரும். 
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
 
 
கன்னி
பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: வரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
 
 
துலாம்
சில புதிய தொழில்கள் தொடங்க ஏதுவான நாள். வியாபாரிகளுக்கு ஓர்டர்கள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி : வரவு 
விசாகம் 1, 2, 3: செலவு
 
 
விருட்சிகம்
பெண்களுக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் உண்டாகும். பிரபலங்களின் சந்திப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 
விசாகம் 4: செலவு
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: வரவு
 
 
தனுசு
மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.  சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். 
மூலம்: லாபம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: சுற்றுலா
 
 
மகரம்
இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்.  வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம்.  விருந்தினர்களின் வருகை உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்:  கவனம்
அவிட்டம் 1, 2 : வரவு
 
 
கும்பம்
பண வரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.  கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.  உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை . 
அவிட்டம் 3, 4: துன்பம் 
சதயம் : உழைப்பு
பூரட்டாதி 1, 2, 3: கவனம்
 
 
மீனம்
சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள் 
பூரட்டாதி 4: இன்பம் 
உத்திரட்டாதி : அமைதி
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .