Shanmugan Murugavel / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரிய அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் உள்ளெடுக்கும்போது பெரியளவில் கிறிஸ்தவ அகதிகளை உள்ளெடுப்பதாக அமைந்து விடும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டின், சிரிய அகதிகளை உள்ளெடுக்கும்போது எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை வழங்கக்கூடாது என கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளினால் அனுமதிக்கப்படுகின்ற பன்னிரண்டாயிரம் சிரிய அகதிகளை உள்ளெடுப்பதுக்கு அவுஸ்திரேலியா இணங்கியிருந்தது.
இந்நிலையிலேயே, அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும், மத அடிப்படையில் பாகுபாட்டைக் காட்டக் கூடாது என பில் ஷோர்ட்டின் தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தல் அச்சத்தை எதிர்நோக்கியுள்ள அகதிகளையே அவுஸ்திரேலியாவுக்குள் உள்ளெடுப்பதே பொருத்தமானதாக இருக்கும் எனத் தெரிவித்த குடியேற்ற அமைச்சர் பீட்டர் டுட்டன், அதில் கணிசமான அளவு கிறிஸ்தவ அகதிகளாக அமையலாம் என கருத்து தெரிவித்தார்.
விகிதாசாரம் அல்லது இலக்குகளை முன்வைப்பது உதவியாக இருக்காது என தெரிவித்த பிரதி அமைச்சரவை செயலாளர் ஸ்கொட் ரயான், அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பரீசீலிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.
மீளக் குடியமர்த்தப்படவுள்ள முதல் ஐந்து அகதிகளும் கடந்த செவ்வாய்க்கிழமை பேர்த்தை வந்தடைந்திருந்தனர். இவர்கள், மேற்கு சிரியாவைச் சேர்ந்த ஹோம்ஸ் நகரத்திலிருந்த ஒரு குடும்பத்தினர் ஆவார்கள். இவர்கள், பேர்த்தின் வடக்கே மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago