Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 20 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறையிலுள்ள விக்கிலீக்ஸின் நிறுவுநரான ஜூலியன் அசாஞ்சே மீதான 2010ஆம் ஆண்டு வன்புணர்வுக் குற்றச்சாட்டு தொடர்பான தங்களது விசாரணையைக் கைவிட்டுள்ளதாக சுவீடன் அரச வழக்குத் தொடருநர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், பிரித்தானிய உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே, சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து நீங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
உளவு பார்த்த குற்றச்சாட்டுகளுக்காக ஐக்கிய அமெரிக்காவால் ஜூலியன் அசாஞ்சே வேண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வசித்தபோடு பிணை நிபந்தனைகளை மீறியதற்காக, இவ்வாண்டு மே மாதத்தில் 50 வார சிறைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
சுவீடனுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்ப்பத்றாக ஏழாண்டுகளாக ஈக்குவடோர் தூதரகத்திலேயே ஜுலியன் அசாஞ்சே வசித்திருந்தார்.
பிறிதொரு பாலியல் தாக்குதல் தொடர்பிலும் நாடுகடத்தல் கட்டளை மய்யப்படுத்தியதாக இருந்தபோதும் அக்குற்றச்சாட்டுக்கான கட்டளைகள் 2015ஆம் ஆண்டு நீர்த்துப் போயிருந்தன.
9 minute ago
49 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
49 minute ago
49 minute ago
55 minute ago