2021 மே 10, திங்கட்கிழமை

அசாட்டை வெளியேற்றுதல் தோல்வியடைந்த தேசமாக்கும்; புட்டின்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அரசாங்கத்தை வெளியேற்ற முயற்சிக்கும் முயற்சிகள், அந்நாட்டை ஈராக் அல்லது லிபியா போன்று தோல்வியடைந்த தேசமாக மாற்றுமென, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

சிரியர்கள் மாத்திரமே தங்களது நாட்டின் விதியைத் தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டுமென, புட்டின் இதன்போது குறிப்பிட்டார்.

'அரசாங்கக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக அவர்களுக்கு உதவுவதைத் தவி, சிரிய நெருக்கடிக்குப் பொருத்தமான வேறு நடவடிக்கை கிடையாது" எனத் தெரிவித்த புட்டின், 'அதே நேரத்தில், நாட்டின் மீளமைப்பை ஏற்படுத்துவதற்கு அறிவார்ந்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நேர்முறையான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

இந்த மாற்றங்களின் அடிப்படையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் முதலில் பதவி விலக்கப்பட வேண்டுமா எனக் கேட்கப்பட்டபோது, 'தங்களுடைய நாட்டை யார் ஆள வேண்டும், எவ்வாறு ஆள வேண்டுமென்பதை சிரிய மக்கள் மாத்திரமே தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டவர்கள்" என புட்டின் மேலும் தெரிவித்தார்.

சிரிய நெருக்கடி தொடர்பாக, மேற்குலக நாடுகளுக்கும் சிரியாவுக்குமிடையில் கருத்தியல் ரீதியான பலத்த வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X