2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அபு சயாஃப் போராளிகள் 40 பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொட்ரிகோ டுட்டேர்ட்டே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய நடவடிக்கையாக, தெற்கு தீவுகளான மின்டானோவின் இரண்டு போர்முனைகளில், அபு சயாஃப் குழுவின் போராளிகள் 40 பேரை கொன்றுள்ள பிலிப்பைன்ஸ் துருப்புகள், மேலுமொரு 25 பேரை காயமடையவைத்துள்ளனர்.

தெற்கு சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ காடுகளில் கடந்த வாரம் ஆரம்பித்த தாக்குதல்களில், போராளிகள் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய இராணுவப் பேச்சாளர் மேஜர் ஃபிலமன் டான் திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி தாக்குதலுடன் ஏக காலத்தில் அண்மையிலுள்ள பசிலான் மாகாணத்திலுள்ள தீவில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் அபு சயாஃப் போராளிகள் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் டான் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி, தனது ஆறு வருடங்கள் பதவிக்காலத்துக்கு பதவியேற்ற டுட்டர்ட்டே, கப்பத்துக்காக கடத்துதல்களை நிறுத்துமாறு அபு சயாஃப் குழுவை எச்சரித்ததுடன், அவர்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னர் அல்-கொய்தாவுக்கு ஆதரவு வழங்கி, தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கு ஆதரவளிக்கும் அபு சயாஃப், கனேடிய பணயக்கைதிகள் இருவரின் தலையை கடந்த மாதங்களில் துண்டித்ததன் மூலம் பிரபலத்தன்மையைப் பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .