2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அமைச்சர் மீது முட்டைத் தாக்குதல்

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிஷா மாநிலத்தின் கென்ரபார மாவட்டத்தில் வைத்து, பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் மீது, முட்டைத் தாக்குதல் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா தளம், கறுப்புக் கொடிகளைக் காட்டி, ஆரவாரம் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

குறித்த மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்​கு, நேற்று (14) சென்றிருந்த போதே, அங்கிருந்த குறித்த கட்சியைச் சேர்ந்தவர்கள், முட்டைத் தாக்குதலை மேற்கொண்டு, கறுப்புக் கொடிகளைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

முதலாவதாக, ராஜ்கனிக்கா பகுதயில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காகச் சென்ற அமைச்சர் மீது, முட்டைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாண்டுகாலம் நிறைவடைந்துள்ளது என்று கூறியே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மத்தியப் பிரதேசத்தில், விவசாயிகளை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாகக் கண்டனத்தை தெரிவித்து, கறுப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.  

“மத்தியை ஆட்சி செய்யும் அரசாங்கம், அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறிவிட்டார்கள். அவர்கள் என்னசெய்தாலும், எங்குச் சென்றாலும், நாம் எதிர்ப்பைத் தெரிவிப்போம்” என்று, காங்கிரஸின் எம்.எல்.ஏ, ஆல் தேபேந்திரா ஷர்மா தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X