Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 29 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லும், ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களின் உட்பகுதிகளிலும், மடிக்கணினியை வைத்திருப்பதை ஐக்கிய அமெரிக்கா தடை செய்யும் என, ஐக்கிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெல்லி, நேற்று (28) தெரிவித்துள்ளார்.
இருக்கக்கூடியது என நம்பப்படும் பாதுகாப்பு ஆபத்துகளிலிருந்து காத்துக்கொள்வதற்கான அதிகரிக்கப்பட்ட நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே, மேற்படி தடை வரவுள்ளது. எவ்வாறெனினும், எப்போது தடை விதிப்பதென்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என, கெல்லி கூறியுள்ளார்.
விமானத்தில் கொண்டு செல்லும் பொருட்கள் உள்ளடங்கலாக, விமானப் பாதுகாப்பின் மட்டத்தை உயர்த்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுவதாக, நேர்காணலொன்றில் கெல்லி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலுள்ள விமான நிலையங்கள் உட்பட, 10 விமான நிலையங்களிலிருந்து வரும் விமானங்களில் உட்பகுதியில், மடிக்கணினிகளை வைத்திருப்பதற்கு, ஐ. அமெரிக்க அரசாங்கம், இவ்வாண்டு மார்ச்சில் தடை விதித்திருந்தது.
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago