2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க ஜனாதிபதி கொரோனாவால் பாதிக்கப்படவில்லை

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதைப் பரிசோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்தார்.

ஃபுளோரிடாவிலுள்ள தம்முடைய ஓய்வு விடுதிக்குச் டிரம்ப், சென்றிருந்தபோது பிரேஸில் ஜனாதிபதி பேராளர் குழுவைச் சேர்ந்த சிலரைச் சந்தித்திருந்தார்.

பயணத்திற்குப் பின் அந்தப் பேராளர் குழுவில் சிலருக்குக் கிருமி தொற்றியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குழுவைச் சந்தித்து ஒரு வாரம் கழிந்த நிலையில் டிரம்ப் மீது மேற்கொண்ட பரிசோதனை முடிவுகள் அவருக்குக் கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .