Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.தெஹ்ரான்,
அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன அதிகாலை ஈரான் படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் ஐன் அல்-ஆசாத் விமான தளம், எர்பில் தளமும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைனை கவிழ்த்த 2003 அமெரிக்க தலைமையிலான நடவடிக்கைக்குப்பின் ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் முதலில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் சுமார் 1,500 அமெரிக்க நாட்டின் கூட்டணி படை வீரர்கள் உள்ளனர்.
இங்கு சுமார் 70 நோர்வே வீரர்களும் இந்த விமான தளத்தில் இருந்தனர். ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று நோர்வே ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரைஞ்சர் ஸ்டோர்டல் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஈராக்கில் இருந்த அமெரிக்க இலக்குகள் ஈரானால் ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் தாக்குதல்களில் குறைந்தது 80 "அமெரிக்க பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.
மேலும் ஏவுகணைகள் எதுவும் தடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.
அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறி வைக்கும் என்று ஒரு மூத்த புரட்சிகர காவல்படை ஆதாரத்தை மேற்கோள் காட்டி அரசு டிவி தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஹெலிகொப்டர்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் "கடுமையாக சேதமடைந்துள்ளன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago