Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 25 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் எதிர்காலம் தொடர்பான வதந்திகள் பரவிவரும் நிலையில், ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர், தென்கொரியாவுக்குச் செல்லவுள்ளார்.
தென்கொரியாவைச் சேர்ந்தவரான பான் கீ மூன், இவ்வாண்டுடன், ஐக்கிய நாடுகளின் செயலாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார். அதன் பின்னர் அவர், தென்கொரிய அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, அடுத்தாண்டு ஜனவரியில், தென்கொரியாவின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஆளும் பழைமைவாதக் கட்சியின் சார்பில் அவரைப் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் மிகவும் பிரபலமானவரான பான் கீ மூன், அந்நாட்டில் மிகவும் மதிக்கப்படுபவராக உள்ளார்.
இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு பான் கீ மூன் மறுப்பதோடு, ஐ.நா பதவியின் எஞ்சிய காலம் குறித்த தனது கவனம் காணப்படுவதாகத் தெரிவிக்கிறார்.
ஆனால் ஆளுங்கட்சியோ, அவ்விடயத்தில் நேரடியான கருத்துகளை வெளியிடுகிறது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் ஹொங்-ஜூன், 'ஐ.நா செயலாளர் நாயகம், உலகின் ஜனாதிபதி ஆவார். பான் கீ மூன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதோடு, ஐ.நாவின் உச்ச பதவியில் 10 ஆண்டுகள் இருந்து, உலகத் தலைவர்களுடன் அதிகமான தொடர்புகளைக் கொண்டவர். அவரைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான நேரமிது" என்றார்.
தொழில்முறையாக இராஜதந்திரியாகவே இருந்த பான் கீ மூன், அரசியற்கட்சியொன்றில் எப்போதுமே இணைந்திருக்கவில்லை. ஆனால், முன்னாள் லிபரல் ஜனாதிபதியின் கீழ், 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அவர், வெளிநாட்டு அமைச்சராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
06 Jul 2025