2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அல்-அக்சா பள்ளிவாசலுக்குள் புகுந்தன இஸ்ரேலியப் படைகள்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் புகுந்துள்ளன. புதிதாக இடம்பெற்றுவரும் மோதல்களுக்கு மத்தியிலேயே இப்படைகள் புகுந்துள்ளன.

தியாகப் பெருநாள் கொண்டாட்டங்களின் இறுதிநாளும் யூதர்களின் கொண்டாட்டமான சுகொட்டுக்கு ஒருநாள் முன்னதானதுமான இன்றே இது இடம்பெற்றது.

அங்கு காணப்பட்ட பொலிஸார் மீது இளம் பலஸ்தீனர்கள், கற்களையும் வெடிகளையும் எறிந்ததாகவும், பதிலுக்கு, கலகமடக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டதாதகவும் பொலிஸ் அறிக்கை தெரிவித்தார்.

அல்-அக்சா பள்ளிவாசலில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான மோதல் நிலைமையில் ஓர் அங்கமாகவே இது இடம்பெறுகிறது. முன்னதாக, பள்ளிவாசலுக்குச் செல்லும் பலஸ்தீனர்களோடு இஸ்ரேலியப் பாதுகாப்புப் பிரிவினர் தர்க்கங்களின் ஈடுபட்டு வந்தனர்.

அல்-அக்சா பள்ளிவாசலானது முஸ்லிம்களின் மிகவும் புனிதம்மிக்க பள்ளிவாசல்களில் ஒன்று என்பதோடு, யூதர்களும் அதை மலைக் கோவில் எனத் தெரிவித்து வழிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .