2025 ஜூலை 02, புதன்கிழமை

அல்-அக்சாவில் இஸ்ரேலியப் பொலிஸாரும் பலஸ்தீனர்களும் மோதல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்-அக்சா பள்ளிவாசலுக்குள் நேற்று புகுந்த இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருக்கும் அங்கு வழிபாட்டில் ஈடுபடும் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பலஸ்தீனர்களுக்கிடையில் இரண்டாவது நாளாகவும் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெருசலேத்திலுள்ள இந்தப் பள்ளிவாசலில்,  இன்று காலையில் புகுந்த இஸ்ரேலியப் பொலிஸாருக்கும் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்பட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலின் ஜன்னல்களூடாக, அதிர்ச்சியளிக்கும் கிரனேட் குண்டுகளை பொலிஸார் வீசி எச்சரிக்கை செய்ததாகவும், பதிலுக்கு, தடுப்பு அணைகளை அமைத்து வழிபடுபவர்கள் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்கள் தொடர்வதாகவும், அங்கு உச்சநிலைப் பதற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, வலதுசாரி யூத அமைப்புகள் பள்ளிவாசலுக்குள் புகத் தயாராக உள்ளதால், அங்கு பதற்றம் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .