Shanmugan Murugavel / 2016 மார்ச் 27 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பிரதிநிதிகள் தேர்தல்களில், அலாஸ்காவிலும் வொஷிங்டனிலும் ஹவாயிலும் இடம்பெற்ற தேர்தல்களில், பேர்ணி சான்டர்ஸ் வெற்றிபெற்றார்.
வொஷிங்டனில் 101 பிரதிநிதிகளுக்காக இடம்பெற்ற தேர்தலில், பேர்ணி சான்டர்ஸ் அதிரடி வெற்றிபெற்றார். 72.6 சதவீத வாக்குகளைப் பெற்ற பேர்ணி சான்டர்ஸ், 27.2 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்ற ஹிலாரி கிளின்டனை விடச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தார்.
அலாஸ்காவில் 16 பிரதிநிதிகளுக்காக இடம்பெற்ற தேர்தலில், 81.6 சதவீத வாக்குகளைப் பெற்ற பேர்ணி சான்டர்ஸ், 18.4 சதவீத வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டனை இலகுவாக வெற்றிகொண்டார்.
ஹவாயில் இடம்பெற்ற தேர்தலில், 16 பிரதிநிதிகளுக்காக இடம்பெற்ற தேர்தலில், 81.6 சதவீத வாக்குகளைப் பெற்ற பேர்ணி சான்டர்ஸ், 18.4 சதவீத வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டனை இலகுவாக வெற்றிகொண்டார்.
இம்மூன்றிலும் அவர் வெற்றிபெற்றமை, ஜனநாயகக் கட்சிக்கான வேட்புமனுவில் முன்னிலை வகிக்கும் ஹிலாரி கிளின்டனுக்கான அவரது சவாலை அதிகரிக்குமெனக் கருதப்படுகிறது. ஆனால், ஹிலாரி கிளின்டனை முந்துவதற்கு, அவருக்கு இன்னமும் கடினமான பாதையொன்றே காத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், 'வேட்புமனுவை நாங்கள் வெல்ல முடியாது என்றோ அல்லது பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றோ, வேறு யாரும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவையிரண்டையும் நாம் வெற்றிகொள்ளவுள்ளோம்" என்றார்.
4 minute ago
20 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
24 minute ago
26 minute ago