Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூலை 18 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதார் அட்டை உள்ளிட்ட அரசாங்கத்தின் திட்டங்களுக்காக, தனிநபரொருவரது தகவல்களைப் பெறுவது, அடிப்படை உரிமைய மீறல் ஆகுமா என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, 9 நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வை நியமித்து, உச்ச நீதிமன்றம், இன்று (18) உத்தரவிட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு, ஒருவரைப் பற்றிய தனிப்பட்டத் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. இப்படிப்பட்ட விவகாரம், தனிநபர் உரிமை மீறலாகும் என்று, இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில், கடந்த 1950ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் எட்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடுவது அடிப்படை உரிமை மீறல் ஆகாது என்று, கருத்து தெரிவித்திருந்தது.
அதேவேளையில், மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக 1960ஆம் ஆண்டு வெளியான, 6 நீதியரசர்கள் கொண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்ப்பு, முந்தைய தீர்ப்புக்கு எதிர்மாறான கருத்தை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசாங்கத்தின் சிறப்புத் திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிவரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
மத்திய அரசாங்கத்தின் இந்த உத்தரவு, தனிமனித உரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும் ஆதார் அட்டைத் திட்டமும், அதைப் பெறுவதற்கு கையாளப்படும் முறைகளும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளதாகவும், பல்வேறு தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், அனைத்தும் ஒரேவழக்காக இணைக்கப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு, 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தனிநபர்களின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத்தில், முன்னர் அளித்திருந்த தீர்ப்புகளைத் தெளிவாக ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்வதற்காக, ஒன்பது நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர், இன்று பரிந்துரை செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago