2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் கிழக்கு கொங்கோவில் 19 பேரைக் கொன்றனர்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், இஸ்லாமிய ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் குறைந்தது 19 பேரைக் கொன்றதாக பெனி பிராந்தியத்தின் நிர்வாகி டொனட் கிப்வானா நேற்று தெரிவித்துள்ளார்.

உகண்டா எல்லைக்கருகிலுள்ள காட்டுப் பிராந்தியமொன்றிலுள்ள ஒய்ஷா நகரத்துக்கருகேயுள்ள மலெகி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக டொனட் கிப்வானா கூறியுள்ளார்.

இந்நிலையில், உகண்டாவைச் சேர்ந்த கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பல ஆண்டுகளாக இயங்கும் இணைந்த ஜனநாயகப் படைகளையே இத்தாக்குதலுக்கு டொனட் கிப்வானா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குத் திரும்ப பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்ப உறுப்பினர்கள் செல்ல மறுப்பதாகவும் ஆனால் ஆரம்பத் தேடுதலொன்றில் இறந்த 19 பேரைக் கண்டுபிடித்ததாக டொனட் கிப்வானா கூறியுள்ளார்.

இந்நிலையில் தேடுதல் தொடருகையில் மேற்படி இறந்தோரின் மதிப்பீடானது தற்காலிகமானதாகவே காணப்படுவதாக டொனட் கிப்வானா மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில், இணைந்த ஜனநாயகப் படைகளுக்கெதிரான நடவடிக்கையொன்றை இராணுவம் ஆரம்பித்த பின்னர், அவர்கள் 14 தாக்குதல்களில் குறைந்தது 80 பேரை ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி கொன்றுள்ளனர்.

இணைந்த ஜனநாயப் படைகளின் முன்னைய சில தாக்குதல்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் உரிமை கோரப்பட்டபோதும் அவர்களின் உறவின் நீட்சி தற்போது வரை தெளிவில்லாமலுள்ளது.

இந்நிலையில், அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து, மக்களைப் பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை இராணுவமும், ஐக்கிய நாடுகளும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து ஒய்ஷாவுக்கு 20 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள பெனி நகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .