2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆஸி தேர்தல்: வெற்றியைப் பிரகடனம் செய்தார் பிரதமர்

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மத்திய தேர்தலில், தனது கட்சி வெற்றிபெற்றுள்ளதாக பிரதமர் மல்கொம் டேர்ண்புல் பிரகடனம் செய்துள்ளார்.

இம்மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக்கும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சிக்குமிடையில் கடுமையான போட்டிய நிலவிய நிலையில், தற்போது ஆளுங்கட்சி, முன்னிலை பெற்றுள்ளது.

தனது வெற்றியைப் பிரகடனம் செய்து உரையாற்றிய பிரதமர் டேர்ண்புல், 'தேர்தலை நாம் வென்றுள்ளோம். அதைத் தான் நாம் செய்துள்ளோம்' என்று தெரிவித்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டினிடம் இருந்து, தனக்கு அழைப்புக் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு, நாடாளுமன்றம் சரியாக இயங்குதல் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட செய்தி:
அவுஸ்திரேலியத் தேர்தல்: தோல்வியை ஏற்றுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .