Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட ஸ்தலத்திற்கு இத்தாலியப் பிரதமர் மத்தையோ றென்ஸி விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களை விட மேலும் பலர் காயமடைந்த நிலையில், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர். இந்நிலையில், இரத்ததானத்தை மேற்கொள்ளுமாறு மக்களை உள்ளூர் அதிகாரிகள் வினவியுள்ளனர்.
தெற்குப் பிராந்தியமான புவையாவிலுள்ள பாரி, பர்லிட்டா ஆகிய நகரங்களுக்கிடையிலான தனித்த பாதையில் சென்ற ரயில்களே, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (12) முற்பகல் 11.30க்கு நேருக்குநேர் நல்ல வானிலையிலேயே மோதியிருந்த நிலையில், என்ன காரணத்தால் மோதல் ஏற்பட்டது என தெளிவில்லாமல் உள்ளது. இந்நிலையில், மோதல் தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணைக்கு றென்ஸி உத்தரவிட்டுள்ளார்.
அவசர சேவையைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களால், சிதிலமடைந்த ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட ஒரு சிறிய குழந்தை ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில், அழுகை வருவதற்கான தருணம் என இச்சம்பவத்தை விளித்த இத்தாலிய பிரதமர் றென்ஸி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago