2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இமாச்சலப் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 28 பேர் பலி

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வடபகுதி மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில், இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில், குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்லும் பகுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டது.

ஷிம்லாவிலிருந்து 100 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. ராம்பூர் என்ற பகுதியிலேயே, விபத்துச் சம்பவித்தது.

உயரமான இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்து சுமார் 200 மீற்றர்கள் கீழே விழுந்து, மலையிடுக்குப் பகுதியில் அது வீழ்ந்தது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிண்ணாவூர் மாவட்டத்திலிருந்து சோலன் பகுதியை நோக்கி, சுமார் 40 பேரை, இந்த பஸ் ஏற்றிக் கொண்டு சென்றது என அறிவிக்கப்படுகிறது.

இந்திவானி ஜம்மு - காஷ்மிம் பகுதியில், கடந்த வாரம் இடம்பெற்ற பஸ் விபத்தில், 16 யாத்திரிகர்கள் பலியாகிருந்தனர். முன்னர் ஏப்ரலில், இமாச்சலப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், 44 பேர் பலியாகியிருந்தனர்.

இந்தியாவில், வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துகள் காரணமாக, 150,000க்கும் மேற்பட்டோர், வருடாந்தம் இறப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மோசமான வீதிகள், ஒழுங்காகப் பராமரிக்கப்படாத வாகனங்கள், பொறுப்பற்ற வாகன ஓட்டம் ஆகியன, விபத்துகளுக்கான காரணங்களாக அமைகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .