2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இரசாயனக் கழிவுநீர் கலந்ததால் பொங்கிவரும் நச்சுநுரை

Editorial   / 2017 மே 30 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூருவிலுள்ள வர்தூர் ஏரியில், அதிக அளவிலான இரசாயனக் கழிவுநீர் கலந்ததால், திடீரென்று நச்சுத்தன்மை மிக்க நுரைகள், வீதி முழுவதும் பொங்கியதில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, அதிவேகமாக நகரமயமாகி வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இதன் விளைவாக, கழிவுநீர் வெளியேற்றமும் அதிகரித்துவருகிறது. ஒரு நாளைக்கு, சுமார் 1,000 மில்லியன் லீற்றர் கழிவுநீர் வெளியேறுகிறது. இது, சாக்கடைகள் மூலமாக பெங்களூருவின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வர்தூர் ஏரியில் கலக்கிறது.

இந்த ஏரியில், கழிவுநீரின் அளவு அதிகரிக்கும்போதெல்லாம், தண்ணீரில் ஆங்காங்கே உருவாகும் நுரை, மலைபோல குவிந்துவிடும். அந்த நுரை, அருகிலுள்ள சாலைகளில் பறக்கும். இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கழிவுநீர் அதிகரித்ததால், நேற்றும் (29) வாகன ஓட்டிகளின் முகங்களில் நுரைகள் பறக்க ஆரம்பித்தன. இந்த நுரையில் உடலைப் பாதிக்கும் நச்சுகள் கலந்துள்ளதாக  சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .