2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இலகு போதையை நாடிய 52 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலிவான போதையைத் தேடிச் சென்று, குளிப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வகை திராவகத்தை அருந்திய 52 பேர், ரஷ்ய நகரமொன்றில் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் ஆளுகைக்குட்பட்ட சைபீரியாவின் இர்குட்ஸ்க் என்ற நகரத்திலேயு, இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெதனோல் உள்ளடங்கிய குறித்த திராவகத்தை, இவர்கள் அருந்தியதாகவும், அதனாலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் திராவகம், 250 மில்லிலீற்றர், 0.65 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களைத் தவிர, மேலும் 29 பேர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் உயிரிழக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதையடுத்து, அந்த நகரத்தில், அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திராவகத்தில், "அருந்துவதற்குப் பொருத்தமற்றது" எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இலகுவாகப் போதை கிடைப்பதற்காக, அதை வாங்கி, பலர் அருந்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சான்றிதழ் அளிக்கப்படா அல்ககோல் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை, அந்த நகரம் இடைநிறுத்தியுள்ளதுடன், வீடு வீடாகச் சென்று, அவ்வாறான மதுசாரப் பொருட்கள் காணப்படுகின்றனவா என, அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .