2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இஸ்லாமியத் தலைவர்களுக்கு பயணத் தடை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிய இஸ்லாமிய இயக்க அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் மூவருக்கு, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் ஷேய்ன் றாட் சாலா, பிரதித் தலைவர் கமல் காதிப், யூசெப் அவவ்டெ ஆகியோருக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், சாலா, அவவ்டெ இருவருக்கும் ஜனவரி 15, 2016வரை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, காதிப் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதற்கு ஜனவரி 18ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நடமாட அனுமதிப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையுமென எண்ணுவதாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சுத் தெரிவித்தது.

எனினும், இந்தப் பயணத்தடையைக் கண்டித்துள்ள மனித உரிமைகள் அமைப்புகள், அரேபிய மக்களின் அரசியல் உரிமைகளை அடக்குவதற்கான இஸ்ரேலின் முயற்சியே இதுவெனவும், பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கெதிரான கருத்துக்களை வெளியிடாமல் இருக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .