2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஈராக்குக்கு அமெரிக்க ஈருடகப் படைவீரர்கள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் றொக்கெட் தாக்குதலில் ஐக்கிய அமெரிக்காவின் ஈருடகப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, ஈராக்குக்கு மேலதிக துருப்புக்களை அனுப்பப்போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ,எஸ்-உடன் மோதலில் ஈடுபடும் ஐக்கிய அமெரிக்கப் படைகளுடன், 26ஆவது ஈரூடக சிறப்பு படைப் பிரிவின் துருப்புக்கள் இணைந்து கொள்ளும் என பென்டகன் தெரிவித்துள்ளது.

எத்தனை ஈருடகப் படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என தெளிவாகத் தெரியாதபோதும், வடக்கு ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னரங்குகளுடன் மக்முருக்கு அருகிலுள்ள கூட்டணித் தளத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவே மேற்படி நகர்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அன்பார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில், குறைந்தது 24 ஈராக்கியப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பிறிதொரு 12 பேர் காயமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .