2025 ஜூலை 03, வியாழக்கிழமை

எகிப்துஎயார் புறப்பட முன்பு 'தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருந்திருக்கவில்லை'

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் காணாமற்போய், கடலில் வீழ்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள எகிப்துஎயார் நிறுவனத்தின் விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, எந்தவிதமான தொழில்நுட்பப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை என, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் எகிப்திய புலனாய்வுச் செயற்குழு அறிவித்துள்ளது.

எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், ராடாரில் அந்த விமானத்தைக் கண்டததாக, எகிப்தின் வான்பயணக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்ததோடு, அவ்விமானம், தங்களோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எகிப்திய எல்லைப் பகுதிக்குள் வந்து ஒரு நிமிடத்துக்குள்ளேயே, விமானம் காணாமற்போனதாகத் தெரிவிக்கும் அவ்வதிகாரிகள், திடீரெனத் திரும்பியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விமானம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ள எகிப்தின் அரச பத்திரிகையான அல்-அஹ்ரம், விமானம் புறப்பட்டு மூன்றரை மணிநேரங்களாக, இலத்திரனியல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்ததாகவும், அது அனுப்பிய முதலிரு செய்திகளிலும், விமானம் முழுவதுமாகச் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டதாகவும், மூன்றாவது செய்தியின்படி, இணை விமானியின் ஜன்னல் பக்கமாக, வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .