2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

எரிமலை சாம்பலால் புகை மூட்டம்:மீண்டும் ஐரோப்பிய விமான போக்குவரத்தில் பாதிப்பு

Super User   / 2010 மே 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்தின் அய்யா பியாலா யெர்குல் எரிமலை மீண்டும் சாம்பலைக் கக்கி வருவதால் புகை மூட்டம் வியாபித்துள்ளது. இதனால், ஐரோப்பிய விமானப் போக்குவரத்து மீண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவுக்கும், வட அமெரிக்காவுக்குமிடையிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக செல்கின்றன. மேலும் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயின் மற்றும் வடக்கு பிரான்ஸின் பெரும்பாலான வான் பகுதியை எரிமலைச் சாம்பல் ஆக்கிரமித்துள்ளது. ஐஸ்லாந்திலிருந்து வடக்கு ஸ்பெயின்வரை சுமார் 2,000 கிலோமீற்றர் அளவுக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் கிரீன்லாந்து அல்லது தெற்கு ஸ்பெயின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இந்த எரிமலைச் சாம்பல் ஆக்கிரமிப்பால் கிட்டத்தட்ட 10ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஐந்து நாட்கள் உலகம் முழுவதும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது.

தற்போதைய புதிய எரிமலைச் சாம்பலால் ஸ்பெயினில் 19விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பார்சிலோனா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--