2021 ஜனவரி 27, புதன்கிழமை

3 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் கிழக்குக் கரையோரத்திலிருந்து, 500 தொடக்கம் 600 கிலோமீற்றர்கள் கடற்பக்கமாகச் சென்ற 3 ஏவுகணைகளை, வடகொரியா இன்று காலை ஏவியதாக, தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அண்மைக்கால இராணுவ முன்னெடுப்புகளில் அடுத்த கட்டமாக, இந்த ஏவுதல்கள் இடம்பெற்றுள்ளன.

சோவியத் காலத்தின் ஸ்கட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஏவுகணைகளின் ஏவலை அவதானித்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் இராணுவமும் அறிவித்துள்ளது.

ஏவப்பட்ட 3 ஏவுகணைகளில் 2, ஒரே வகையிலானவை எனத் தெரிவிக்கும் தகவல்கள், முன்னைய காலங்களில் ஏவப்பட்ட ஏவுகணைகள், அதன் புதிய ஏவுகணைகளைப் பரிசோதிப்பதற்காக ஏவப்பட்ட நிலையில், இம்முறை ஏவப்பட்டவை, தமது இராணுவப் பலத்தை வெளிக்காட்டும் நோக்கிலேயே ஏவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரியத் தீபகற்பத்தில், நவீனரக ஏவுகணைக்கெதிரான "தாட்" கட்டமைப்பை நிறுவுவதற்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் முடிவுசெய்திருந்த நிலையில், அதற்கெதிராக "பௌதிக எதிர்வினைகள் ஆற்றப்படும்" என, வடகொரியா எச்சரித்திருந்தது. அவ்வாறான எச்சரிக்கையே, தற்போது விடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .