2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சாம்பல்; விமான நிலையங்கள் பலவும் மூடப்பட்டன

Super User   / 2010 மே 16 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்தில் வெடிக்கும் நிலையிலுள்ள எரிமலையொன்றிலிருந்து கிளம்பும் சாம்பல் மூட்டம் காரணமாக மீண்டும் விமானப் போக்குவரத்துக்களில் பாதிப்பி ஏற்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ஐஸ்லாந்திலுள்ள பெரிய எரிமலையொன்று வெடித்து சிதறியதால், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஐஸ்லாந்தில் மீண்டும் ஒரு எரிமலை வெடிக்க தயாராக குழம்பை கக்கி வருவதால், அதிலிருந்து கிளம்பும் சாம்பல் மூட்டம் ஐரோப்பிய வான் பாதையை மறைத்துள்ளது.

இன்று அதிகாலை முதல் ஏற்பட்ட இந்த சாம்பல் மூட்டம் காரணமாக லண்டன் உட்பட இங்கிலாந்தின் பல விமான நிலையங்களும், அதேபோன்று அயர்லாந்தின் பல விமான நிலையங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--