2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஐ.அ.அமீரகத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு?

Editorial   / 2017 ஜூன் 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் யசெப் அல்-ஒட்டெய்பாவின் மின்னஞ்சல்களை ஹக் செய்த குழுவொன்று, அவற்றைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. "பூகோளக் கசிவுகள்" எனும் குழுவால், இந்த மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மின்னஞ்சல்களின்படி, ஒட்டெய்பாவுக்கும் இஸ்ரேலுக்குச் சார்பான நவ பழைமைவாத அமைப்பான ஜனநாயகத்துக்கான பாதுகாப்புக்கான நிறுவகத்துக்குமிடையில், நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல்களில் சில, 2014ஆம் ஆண்டுக்குரியன என்பதோடு, குறித்த நிறுவகத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையில், பின்வாசல் வழியான உயர்மட்டத் தொடர்பு காணப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிராந்தியத்தினதும் பூகோளத்தினும் பலமான சக்தியாக, கட்டாரின் முக்கியத்துவத்தையும் அதன் நற்பெயரையும் தரமிறக்குவதற்கு, குறித்த நிறுவகத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையில் தெளிவான தொடர்பொன்று காணப்பட்டுள்ளதோடு, கட்டாரும் குவைத்தும், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கின்றன என்று ஆக்கங்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களோடு, ஐக்கிய அரபு அமீரகம், இணைந்து செயற்பட்டுள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, கட்டாரை மையமாகக் கொண்ட அல் ஜஸீரா ஊடகம் தொடர்பாகவும் அதேபோன்று ஈரான் தொடர்பாகவும், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவற்றுக்கும் இடையில், தொடர்புகள் வலுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல்கள், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .