2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான போட்டியில் முன்னாள் ஆஸி பிரதமர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் றட், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளதோடு, தன்னுடைய வேட்புமனுவுக்கு ஆதரவளிக்குமாமறு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதியுடன், தற்போதைய செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், யுனெஸ்காவின் தலைவரான பல்கேரியாவைச் இரினா பொகோவா, ஐ.நாவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவரும் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமருமான ஹெலென் கிளார்க் உட்படப் பலரும், இப்பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே, தற்போது கெவின் றட்டும், தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டமைச்சர் ஜூலி பிஷப், அவரின் கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஏற்கெனவே பிரதமர் கூறியதன்படி, அமைச்சரவையே அதற்கான முடிவை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர்வரை, பாதுகாப்புச் சபையே, செயலாளர் நாயகத்தை நியமித்து வந்தது. ஆனால், கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால், தமது விண்ணப்பக் கோரிக்கையைப் போட்டியாளர்கள் அனுப்புவதோடு, பின்னர் இடம்பெறும் கேள்வி நேரங்களில் பங்குபற்ற வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையும், பின்னர் 2013ஆம் ஆண்டிலும் பிரதமராகப் பதவி வகித்த கெவின் றுட், தற்போது கொள்கைத் திட்டமிடல் நிறுவனமான ஏஷியா சொஷைட்டியின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .