2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கட்டாருக்கு அனுதாபம் தெரிவித்தால் சிறை

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலையைத் தொடர்ந்து, கட்டாரை நோக்கி, அனுதாபத்தை வெளிப்படுத்துவதைத் தடைசெய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், அதையும் மீறி அவ்வாறு செயற்படுபவர்கள், அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்குச் சிறையிலடைக்கப்படுவர் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அறிக்கையொன்றை இன்று வெளியிட்ட ஐ.அ.அமீரகத்தின் சட்டமா அதிபர் ஹமாட் சையப் அல்-ஷம்சி, கட்டார் மீது அனுதாபத்தை வெளியிடுவது, சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய, இணையவழிக் குற்றம் என்று குறிப்பிட்டார்.

“கட்டார் மீது அனுதாபம் அல்லது வேறு வகையான விருப்பத்தை வெளிப்படுத்தும் அனைவர் மீதும், அல்லது ஐ.அ.அமீரகத்தின் நிலைப்பாட்டை எதிர்க்கும் எவர் மீதும், கடுமையானதும் உறுதியானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். அது, சமூக ஊடகத் தளங்களாக இருக்கலாம் அல்லது வேறு வகையான எழுத்துகள், காட்சிகள் அல்லது வாய்வழியானதாக இருக்கலாம்” என, சட்டமா அதிபரின் அறிக்கை தெரிவித்தது.

நாட்டின் மத்திய தண்டனைக் கோவைச் சட்டத்தின்படியும் தொழில்நுட்பக் குற்றங்களைத் தடுக்கும் மத்திய சட்டத்தின்படியும், இந்தக் குற்றத்தை புரிபவர்களுக்கு, 3 தொடக்கம் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 136,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குக் குறையாத, அபராதமும் விதிக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிப்பதற்கு, ஐ.அ.அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள் எடுத்த முடிவைத் தொடர்ந்து, டுவிட்டர் இணையத்தளத்தில், அரேபிய மொழிமூலமான பாவனையில், கட்டாருக்கு ஆதரவான கருத்துகள், பரவலாகப் பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .