2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கௌத்தமாலாவில் கடும் மழை;12 பொதுமக்கள் உயிரிழப்பு

Super User   / 2010 மே 30 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌத்தமாலாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுக்குள் அகப்பட்டு 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 11 பொதுமக்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களாக கௌத்தமாலாவில்  கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கௌத்தமாலாவிலுள்ள எரிமலையொன்றில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதுடன், இதன் காரணமாக 1,800 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--